Esau and Jacob
*இஸ்மவேலின் வ யது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான் (ஆதியாகமம் 25:17) என்பதோடு இஸ்மவேலின் வரலாறு நமது வேதத்தில் முற்றுப் பெறுகிறது.* *இரண்டு தேசங்கள்* உன் வயிற்றில் உண்டாயிருக்கிறது (ஆதியாகமம் 25:23) என்று ரெபேக்காளுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியே *ஏசா, யாக்கோபு* ஆகியோரின் பிறப்பு. எபிரேயர்களின் புகழ் பாடும் எபிரேய காவியமாகிய பழைய ஏற்பாடு ஏதோமியர்களை ஏன் இழிநிலையாக வருணிக்கின்றது? ஏதோமின்மேல் என் *செருப்பை எறிந்து போடுவேன்* (சங்கீதம் 60:8) ஏதோமின்மேல் *என் செருப்பை எறிவேன்* (சங்கீதம் 108:9) *இவ்வாறு பழித்துரைக்கப்படும் ஏதோமியர்கள் யார்?* ஏசாவுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று (ஆதியாகமம் 25:30) ஏதோமியர்களின் தகப்பன் ஏசா (ஆதியாகமம் 36:1) ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர் (ஆதியாகமம் 36:8) ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி (ஆதியாகமம் 36:19) ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா (ஆதியாகமம் 36:43) யாக்கோபு தனது சகோதரன் ஏசாவின் ஆசீர்வாத்தை ஏமாற்றிப் பெற்றுக் கொள்ள விழையும்போது ஈசாக்கு அதனை உணர்ந்து கொள்கிறார் எ...