Esau and Jacob

*இஸ்மவேலின் வ​​யது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான் (ஆதியாகமம் 25:17) என்பதோடு இஸ்மவேலின் வரலாறு நமது வேதத்தில் முற்றுப் பெறுகிறது.*

*இரண்டு தேசங்கள்* உன் வயிற்றில் உண்டாயிருக்கிறது (ஆதியாகமம் 25:23) என்று ரெபேக்காளுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியே *ஏசா, யாக்கோபு* ஆகியோரின் பிறப்பு.

எபிரேயர்களின் புகழ் பாடும் எபிரேய காவியமாகிய பழைய ஏற்பாடு ஏதோமியர்களை ஏன் இழிநிலையாக வருணிக்கின்றது?

ஏதோமின்மேல் என் *செருப்பை எறிந்து போடுவேன்* (சங்கீதம் 60:8)

ஏதோமின்மேல் *என் செருப்பை எறிவேன்* (சங்கீதம் 108:9)

*இவ்வாறு பழித்துரைக்கப்படும் ஏதோமியர்கள் யார்?*

ஏசாவுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று (ஆதியாகமம் 25:30)

ஏதோமியர்களின் தகப்பன் ஏசா (ஆதியாகமம் 36:1)

ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர் (ஆதியாகமம் 36:8)

ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி (ஆதியாகமம் 36:19)

ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா (ஆதியாகமம் 36:43)

யாக்கோபு தனது சகோதரன் ஏசாவின் ஆசீர்வாத்தை ஏமாற்றிப் பெற்றுக் கொள்ள விழையும்போது ஈசாக்கு அதனை உணர்ந்து கொள்கிறார் எனவேதான் நீ என் குமாரனாகிய ஏசாதானோ?! என்கிறார் சந்தேகத்துடன் (ஆதியாகம் 27:24) மறுகணமே ஈசாக்கிற்கு திராட்சரசம் கொடுக்கப்படுகின்றது, *ஈசாக்கின் மதி மயக்கப்படுகின்றது* (ஆதியாகம் 27:25)

*புத்தி தெளிந்த ஈசாக்கு* முழுமனதுடன் ஏசாவை ஆசீர்வதிக்கிறார் (ஆதியாகம் 27:39&40) உன் வாசஸ்தலம் *பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும்* இருக்கும் என்ற ஆசீர்வாதம் ஏசாவுக்கு வழங்கப்படுகின்றது

ஏதோமின் நிலம் *கொழுந்து விட்டெரியும் கீலாகும்* என்று ஏசாயா 34:9 ல் குறிப்பிடப்பட்டுள்ளது

*பூமியின் சாரம் என்பதும், கொழுந்து விட்டெரியும் கீல் என்பதும் நீர்ம தங்கமாகிய பெட்ரோலியப் பொருட்கள்* என்பது புலனாகின்றதல்லவா?

இன்று பெட்ரோலிய ஆசீர்வாத ஆழ்நிலை கிணறுகள் யார் வசம் உள்ளது?

இன்று எருசலேம் தேவாலயமும், அதைச்சார்ந்தவைகளும், நாம் புனித பயணம் மேற்கொள்ளும் ஸ்தானங்களும் யாருக்கு கையளிக்கப்பட்டுள்ளது?

இன்று யாருடைய நாட்டில் பாலும், தேனும் புரண்டோடுகின்றது?

நீங்கள் பலுகிப் பெருகுங்கள் என்ற கர்த்தரின் ஆணையை இன்று யார் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்?

யார் தனது சொந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

யாக்கோபைச் சந்திக்க ஏசா வரும்பொழுது (ஆதியாகம் 32:25) முந்தின இரவு ஒரு புருஷன் யாக்கோபின் தொடைச்சந்தைத் தொட்டதினிமித்தம் ஏற்பட்டச் சுழுக்கின் அவல நிலையை அறிந்து கொள்ள *எபிரேய வேதத்தை படித்து அறிந்து கொள்ளவேண்டியுள்ளது.*

யாக்கோபின் சந்ததியான சாலொமோன் கட்டிய எருசலேம் தேவாலயம் யாக்கோபின் வசமில்லை. மேற்குச் சுவர் மட்டுமே மீந்துள்ளது முட்டி முட்டி அழுவதற்கு.

யாக்கோபின் வீட்டாரை விட்டு பட்டயம் இன்றளவிலும் ஓயவில்லை (இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்) 2சாமுவேல் 12:10

ஏசாவை இருமுறை எத்தியதால் யாக்கோபு அந்நிய தேசத்திலே தன் ஜீவனை விடுகின்ற இறுதி நாட்கள்வரை ஏமாற்றம் பின்தொடருகிறது.

யாக்கோபின் 13 வாரிசுகளில் பெயர் பெற்றது யூதா மட்டுமே!

*சக்கரத்தை சுழல வைக்கும் எரிபொருள் (ஏசாவுடையது) தொழில் நுட்பம் (யூதாவுடையது)*

*யூதர்கள் தவறியதால் உலகம் அருள்வளமுற்றது; யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்பெடியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?!* - ரோமர் 11:12



*யூதாவோடு ஏசாவின் கண்களும் திறக்கப்பட்டு சகோதரர்கள் ஒருமித்து நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் இன்னும் மிகுதியாகும் அன்றோ?!*

Comments

Post a Comment